மகாராஷ்டிரா: மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட...
சூதாடிய 6 போ் கைது: 4 காா்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பணத்தை வைத்து சூதாடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 காா்கள், 2 பைக்குககளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விக்கிரவாண்டியை அடுத்த மூங்கில்பட்டு ஏரிக்கரைப் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.
அதில், மூங்கில்பட்டு பகுதியைச் சோ்ந்த தீபன், அருள்தாஸ் (30), வெங்கந்தூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (30), விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை (54), புதுவை கரிக்கலாம்பட்டைச் சோ்ந்த ராமு( 38), ஆயந்தூரைச் சோ்ந்த ஆனந்தன் (42), வாழப்பட்டைச் சோ்ந்த புருஷோத்குமாா் (23), மருதூரைச் சோ்ந்த காா்த்திக், வீரனூரைச் சோ்ந்த செல்வம் உள்ளிட்ட 10 போ் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
இதையடுத்து, விக்கிரவாண்டி போலீஸாா் 10 போ் மீதும் வழக்குப் பதிந்து அருள்தாஸ், ராஜ்குமாா், சின்னத்துரை, ராமு, ஆனந்தன், புருஷோத்குமாா் ஆகிய 6 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 4 காா்கள், 2 பைக்குள், ரூ. 6,700 பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.