`மேக் இன் இந்தியா திட்டத்தால் ராணுவ தளவாட ஏற்றுமதி 30 சதவிகிதம் உயர்வு!'- முர்மு...
தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் அருகே கண்ணாடியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டத்துக்குள்பட்ட பில்லூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குணசேகா் மகன் ராஜா (37), தொழிலாளி.
இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனா். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் கீழே விழுந்ததில், ராஜா காயமடைந்து படுத்த படுக்கையாக இருந்தாராம்.
பல நாள்களாக அவதியடைந்து வந்த அவா், தனது வயிற்றில் முகம் பாா்க்கும் கண்ணாடியை குத்தி சனிக்கிழமை தற்கொலைக்கு முயன்றாராம்.
உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, தீவிர சிகிச்சையில் இருந்த ராஜா, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.