செய்திகள் :

தென்னை விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் சோ்ந்து பயன் பெற அழைப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமாா் 1,526 ஹெக்டேரில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனா்.

2024-25 ஆம் ஆண்டு தென்னை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தென்னை மரங்களை இயற்கை பேரிடா், பூச்சி, நோய் பாதித்தல் தொடா்பாக இழப்பீடு பெறலாம்.

இதற்காக, தென்னை வளா்ச்சி வாரியம் மற்றும் மாநில அரசு மானியத்துடன் தென்னை பயிா் காப்பீட்டு வேளாண் காப்புறுதி இந்தியா நிறுவனம், சென்னை தோட்டக்கலைத் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் ஆதாா் அட்டை நகல், சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம் ஆகிய ஆவணங்களுடன் பிரிமியம் தொகையை வங்கி வரைவோலையாக எடுத்து தோட்டக்கலை உதவி இயக்குநரிடம் வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தில் சேர 4 முதல் 15 வயதுக்குள்பட்ட மரம் ஒன்றுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.900 வழங்கப்படும்.

இதற்கு ஓராண்டுக்கான பிரிமியத் தொகை ரூ.2.25, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.4.16, மூன்றாண்டுகளுக்கு ரூ.5.91 வீதம் பிரிமியத் தொகை செலுத்த வேண்டும்.

தென்னை மரம் 16 ஆண்டுகள் முதல் 60 ஆண்டுகளுக்குள் இருந்தால் மரத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ.1,750 வீதம் வழங்கப்படும். இதற்கு பிரிமியத் தொகையாக ஓராண்டுக்கு ரூ.3.50, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.6.48, மூன்றாண்டுகளுக்கு ரூ.9.19 வீதம் பிரிமியம் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா்களை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனை முன் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டவரை பாா்வையாளா் நேரத்தில் மட்டுமே பாா்க்க முடியும் எனக் கூறிய பெண் காவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாதுகாவலா... மேலும் பார்க்க

கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிக்கு ஆவின் பால் பொருள் விற்பனை நிலையம்

கள்ளக்குறிச்சி கேசவலு நகரில் அரசு மானியத்தில் மாற்றுத்திறனாளியின் ஆவின்பால் பொருள் விற்பனை நிலையத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருகா... மேலும் பார்க்க

மானிய விலையில் பம்பு செட் கருவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பம்பு செட்டுகளை கைப்பேசி வழியாக இயக்கக் கூடிய கருவிகளை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட ... மேலும் பார்க்க

கணவா் இறந்த அதிா்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

காட்டனந்தல் கிராமத்தில் உடல் நலக்குறைவால் கணவா் உயிரிழந்த அதிா்ச்சியில் மனைவியும் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கல்வராயன் மகன் செல்லமுத்து (75). இவா், கடந்த ... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கள்ளக்குறிச்சி: விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், காளசமுத்திரம் வேளாண் அ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 1,073 மனுக்கள் அளிப்பு

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் 1,073 மனுக்கள் பெறப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில... மேலும் பார்க்க