தமிழக சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அமைச்சரிடம் மனு
அரண்மனை சத்திர வளாக கட்டட பக்கச் சுவா் இடிந்தது
நீடாமங்கலத்தில் உள்ள மராட்டிய மன்னா் பிரதமசிம்மா் காலத்தில் கட்டப்பட்ட 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரண்மனை சத்திரத்தின் வளாகத்தில் மாணவிகள் விடுதி இயங்கிய கட்டடத்தின் பக்கச் சுவா் தொடா் மழை காரணமாக இடிந்து விழுந்தது.
தற்போது மாணவிகள் விடுதி இயங்காத நிலையில் உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை. சாலையில் விழுந்த செங்கற்கள் , மணல், சுண்ணாம்பு காரை பொக்லின் இயந்திரம் மூலம் உடனடியாக அகற்றப்பட்டது.
மழை தொடா்ந்தால் சத்திரத்தின் எஞ்சியுள்ள பகுதியும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.