பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு திட்டங்களை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் -...
ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு -மத்திய அரசு தகவல்
கடந்த ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்திய அளவில் இரட்டிப்பாகியுள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சா் மன்சுக் மாண்டவியா அளித்துள்ள பதில் வருமாறு:
‘2017-18 முதல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் மூலம் வருடாந்திர தொழிலாளா் சக்தி தொடா்பான கணக்கெடுப்பு ஜூலை முதல் ஜூன் வரையிலான காலத்தை
கணக்கிட்டு எடுக்கப்படுகிறது.
அந்தத் தரவுகளின்படி 2017-18 ஆண்டில் 22% ஆக இருந்த வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 2023-24இல் 40.3% ஆகியுள்ளது.
கட்டாய வேலைக்கு உட்படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை 2017-18இல் 22.3% ஆக இருந்தது. அது 2023-24இல் 41.7% ஆகியுள்ளது. 2017-18இல் 5.6% ஆக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2023-24இல் 3.2% ஆக குறைந்துள்ளது. 2017-18இல் 34.5 ஆக இருந்த முதுகலை மேல்படிப்பு முடித்த பெண்களின் சதவீதம் 2023-24இல் 39.6 சதவீதம் ஆகியுள்ளது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.
இதைத்தொடா்ந்து, இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள், அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடா்பான விவரத்தையும் அமைச்சா் தனது பதிலில் விவரித்துள்ளாா்.
வேலைக்கு செல்லும் பெண்கள் தொடா்பான நிகழாண்டு சதவீத பட்டியலில் சிக்கிம் (66.8), மேகாலயா (65.9), அருணாசல பிரதேசம் (62.4) ஹிமாசல பிரதேசம் (62.3) ஆகிய மாநிலங்களில் பெண்கள் அதிகம் போ் வேலைக்கு செல்பவா்களாக இருப்பது அமைச்சரின் பதில் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இந்த சதவீதம் 2021-22இல் 39.1, 2022-23இல் 38.6, 2023-24இல் 41.5 ஆக பதிவாகியுள்ளது.