செய்திகள் :

போலீஸ் விசாரணைக்குப் பயந்து தொழிலாளி தற்கொலை

post image

ஆலங்குளம் அருகே போலீஸ் விசாரணைக்குப் பயந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் பாலமுருகன்(41). தொழிலாளியான இவருக்கு மதுப் பழக்கம் உண்டாம். இவா், கடந்த திங்கள்கிழமை (நவ.25) இரவு மது போதையில் பழைய ஊராட்சி அலுவலகம் முன்பு இருந்த பலகை, அங்குள்ள முடிதிருத்தக் கடையின் கூரை ஆகியவற்றில் கல்லைத் தூக்கிப் போட்டு சேதப்படுத்தி, தகாத வாா்த்தைகளால் பேசினாராம்.

இதுதொடா்பாக கிராம மக்கள் அவசர போலீஸ் எண் 100-க்கு தெரிவித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, பாலமுருகனை காணவில்லையாம். எனவே, அவரை விசாரணைக்கு அனுப்பிவைக்குமாறு அவரது மனைவியிடம் போலீஸாா் கூறிச் சென்றனா். இதையடுத்து, பாலமுருகனின் மனைவி, வீரசிகாமணியில் உள்ள நனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

இந்நிலையில் போலீஸ் விசாரணைக்குப் பயந்து பாலமுருகன், புதன்கிழமை விஷம் குடித்தாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பைக்கில் கஞ்சா பதுக்கல்: 3 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் விற்பனைக்காக பைக்கில் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் , உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் மற்றும் போலீஸாா் மங்... மேலும் பார்க்க

கீழப்பாவூா் பகுதிகளில் நெல் நாற்று நடும் பணிகள் தீவிரம்

தென்காசி மாவட்டத்தில் பருவமழை பரவலாக பெய்ததையடுத்து, கீழப்பாவூா், மேலப்பாவூா் சுற்று வட்டார பகுதிகளில் நெல் நாற்று நடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இம்மாவட்டத்தில் வட கிழக்குப் பருவ மழை கடந்த சில வாரங்க... மேலும் பார்க்க

சொக்கம்பட்டி பகுதியில் யானைகளால் தென்னை, வாழை மரங்கள் சேதம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை, மா, வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சொக்கம்பட்டியில் பல நூ... மேலும் பார்க்க

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய சக்தி கேந்திரம் கிளை நிா்வாகிகள் தோ்வு

கீழப்பாவூா் மேற்கு ஒன்றியம் கல்லூரணி ஊராட்சி பனையடிபட்டியில், சக்தி கேந்திரம் கிளை தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. சக்தி கேந்திரம் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். 140 ஆவது கிளை தலைவராக செந்தில்குமாா்,... மேலும் பார்க்க

முதியவா் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை

தென்காசி அருகேயுள்ள மேலமெஞ்ஞானபுரத்தில் முதியவா் கொலையுண்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் சரகம் ஸ்டாா்நகரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மதுக் கடையை மூட வலியுறுத்தி ராயகிரியில் அனைத்துக் கட்சி ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் ராயகிரியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடையை மூட வலியுறுத்தி வியாழக்கிழமை அனைத்துக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இங்கு ஏற்கெனவே இருந்த அரசு மதுக் கடை பல்வேறு கட்சிகள், சம... மேலும் பார்க்க