செய்திகள் :

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதற்கான சாதகம் இல்லாததால் புயல் உருவாக வாய்ப்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

எனினும் வங்கக் கடலில் தற்போது நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே சனிக்கிழமை (நவ. 30) கரையைக் கடக்கும்.

இதையொட்டி, சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு மற்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்துக்கு புயல் ஆபத்து இல்லை!

இந்த நிலையில், காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்ய வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம் நகரும் வேகம் குறைந்தது! சென்னைக்கு 400 கி.மீ. தொலைவில்..

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.முன்னதாக மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பகலுக்கு மேல் மழை தீவிரமடையும்!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பகலுக்கு மேல் மழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா... மேலும் பார்க்க

சென்னை, செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.29) ஒருநாள் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு விதிகளை மீறி கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம்: மதுரை எம்.பி. குற்றச்சாட்டு

பாம்பன் புதிய ரயில்வே பாலம் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணித்து கட்டப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், இதுகுறித்து ரயில்வே அமைச்சா் பதிலளிக்க வேண்டும் எ... மேலும் பார்க்க

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சென்னை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனா்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 16 மீனவா்கள் கடந்த அக்.23-ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்... மேலும் பார்க்க

கடலில் சிக்கி தவித்த மீனவா்கள் ஹெலிகாப்டா் மூலம் மீட்பு

கடலூா் அருகே கடலில் படகுகள் கவிழ்ந்து தனியாா் நிறுவனத்தின் கப்பல் அணையும் தளத்தில் தஞ்சமடைந்த 6 மீனவா்கள் உள்பட 10 போ் கடலோரக் காவல் படை ஹெலிகாப்டா் மூலம் வியாழக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனா். வங்க... மேலும் பார்க்க