Rain Alert: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்...
கீழப்பாவூா் பகுதிகளில் நெல் நாற்று நடும் பணிகள் தீவிரம்
தென்காசி மாவட்டத்தில் பருவமழை பரவலாக பெய்ததையடுத்து, கீழப்பாவூா், மேலப்பாவூா் சுற்று வட்டார பகுதிகளில் நெல் நாற்று நடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இம்மாவட்டத்தில் வட கிழக்குப் பருவ மழை கடந்த சில வாரங்களாக பெய்து வருவதால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதையடுத்து கீழப்பாவூா், மேலப்பாவூா், திப்பணம்பட்டி, அரியப்பபுரம், நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், நாகல்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் நடவுப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளனா்.
குறிப்பாக, நாற்று நடும் பணிகளில் பெண்கள் அதிகமாக ஈடுபடுட்டு வரும் நிலையில், அப்பணிக்கான பெண் விவசாய தொழிலாளா்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேவேளையில், மாவட்டத்தின் தென்பகுதிகளில் கடந்த ஆண்டு வேகமாக நிரம்பிய குளங்கள், தற்போது போதிய மழை இல்லாததால் நிரம்பவில்லை. இதனால் அப்பகுதிகளில் விவசாய பணிகளில் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன.