புயல் சின்னம் நகரும் வேகம் குறைந்தது! சென்னைக்கு 400 கி.மீ. தொலைவில்..
Rain Alert: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது என்றும், அதன் வேகம் 10 கி.மீ இருந்து 9 கி.மீ ஆக குறைந்துள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இருந்தும், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து தான் வருகிறது. இதனால், இன்று கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, நாளை என இரண்டு நாள்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய தகவலின் படி, இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நீரிழிவு உள்ளவர்கள், மற்ற சிகிச்சைகளோடு சேர்த்து இதையும் எடுத்துக்கொள்ளலாம். இதை எடுத்துக்கொள்வதால் சர்க்கரைநோய் தானாகக் குறைந்துவிடும் என அலட்சியமாக இருப்பதுதான் தவறு. ஆய்வுபூர்வமாகப் பார்த்தால், வெந்தயத்துக்கும் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. கருஞ்சீரகத்துக்கும் அந்தத் தன்மை உண்டு. நீரிழிவுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள், அவை சித்த மருந்துகளோ, ஆங்கில மருந்துகளோ... அவற்றுடன் சேர்த்து இந்தப் பொடியையும் துணை உணவுப்பொருளாக எடுத்துக்கொள்ளலாம்.
தினமும் சர்க்கரை சேர்த்து காபி, டீ அருந்துவோர், அதற்கு பதிலாக கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் சேர்த்து அரைத்த பொடியைச் சேர்த்துக் கொதிக்கவைத்த தேநீரைக் குடிக்கலாம்.
அஞ்சறைப் பெட்டியில் உள்ள மற்ற பொருள்களை எல்லாம்விடவும், கருஞ்சீரகத்தில் அளவுக்கதிகமான ஆன்டிக்ஸிடன்ட்ஸ் உள்ளது. குறிப்பாக, தைமோகுயினோன் என்ற வேதிப்பொருள், இதில் மிக அதிகம். கருஞ்சீரகத்துக்கு புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தன்மையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. செல்களைப் புதுப்பித்து, உடலின் கழிவுகளை விரைவாக வெளியேற்றி, செல்களைப் புதுப்பிக்கும் தன்மை கொண்டது கருஞ்சீரகம்.
தினமும் இதை கால் டீஸ்பூன் அளவுக்கு பொடியாக எடுத்துக்கொள்ளலாம். பருப்புப்பொடி தயாரிக்கும்போது கருஞ்சீரகத்தையும் சிறிது சேர்த்துக்கொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாள்கள் கருஞ்சீரகம் சேர்த்துக்கொதிக்கவைத்த டீ போன்று அருந்தலாம். குழந்தைகளுக்குத் தேவையில்லை. மற்றபடி பெரியவர்கள் அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.