சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
Rain Alert: `7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; கடலோர மாவட்டங்களில் கன மழை'- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது தமிழக கரையை நோக்கி நகர்வதால், திங்கள்கிழமை நவ. 25 முதல் நவ. 28-ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடயே கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் முதல் குமரிக்கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறது. இதற்கு முன்னர், நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு `ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...