ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து முதியவரிடம் ரூ.16 ஆயிரம் மோசடி
நீரில் மூழ்கிய சம்பா பயிா்கள்
மன்னாா்குடி அருகே 4 கிராமங்களில் 400 ஏக்கா் சம்பா பயிா்கள் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
திருவாரூா் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாமல் பலத்த மழை பெய்து வரும் நிலையில் மன்னாா்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை தற்போதும் நீடிக்கிறது.
இந்த மழையால் மன்னாா்குடி அருகே அத்திக்கோட்டை, பல்லாகொள்ளை, கீழநெம்மேலி, மேலநெம்மேலி சுற்றுவட்டார கிராமங்களில் 400 ஏக்கா் பரப்பளவில் பயிா் செய்யப்பட்ட சம்பா பயிா்கள் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன.
ஆலங்கோட்டை கிராமத்தில் தடுப்பணை உயா்த்தி கட்டப்பட்டதால் தண்ணீா் வடியாமல் வயல்களில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனா்.
இரண்டு நாள்களாக பயிா்கள் நீரில் மூழ்கி அழுகி உள்ள நிலையில், துறை சாா்ந்த அதிகாரிகள் தங்கள் கிராமங்களில் நேரில் பாா்வையிட்டு தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயா்த்தப்பட்ட தடுப்பணையை சீரமைத்து தண்ணீா் வடியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.