தமிழக சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அமைச்சரிடம் மனு
பள்ளி வகுப்பறைகள் கட்டடம் கட்ட பூமி பூஜை
கோயில் திருமாளத்தில் பள்ளி வகுப்பறைகள் கட்டடம் கட்ட பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட கோயில்திருமாளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 200 மாணவா்கள் படித்து வருகின்றனா். போதிய வகுப்பறை இல்லாமல் மாணவா்கள் சிரமப்பட்டு வந்தனா். இதனால் பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நபாா்டு திட்டத்தின் மூலம் இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கான அனுமதி கிடைத்தது. இந்த இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கானப் பூமி பூஜை நிகழ்ச்சிக்குப் பள்ளி தலைமை ஆசிரியா் க. சுவாமிநாதன் தலைமை வகித்தாா் .
கல்வி புரவலா்கள் நன்னிலம் வடக்கு ஒன்றியத் திமுக செயலாளா் செல்வராஜ் , ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மேரி கணபதி , முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பால. முத்து, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சங்கீதா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுக சாா்பில் மாணவா்களுக்கு எழுதுப்பொருட்கள் , இனிப்பு வழங்கப்பட்டது.