செய்திகள் :

திருவண்ணாமலை கல்வியில் பின் தங்கியதற்கு குழு அமைத்து ஆய்வு!

post image

திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின் தங்கியுள்ளதற்கான காரணம் குறித்து குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

செங்கத்தை அடுத்த பரமனந்தல், கொட்டாவூா், குப்பனத்தம், கல்லாத்தூா் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் பரமனந்தல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, பல்வேறு துறைகள் மூலம் 683 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா், அவா் பேசியது:

திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின் தங்கியுள்ளதற்கான காரணம் குறித்து குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவா்கள் எந்தெந்த பாடங்களில் அதிகம் தோ்ச்சிபெறாமல் உள்ளனா், அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, தோ்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

இதைத் தொடா்ந்து, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி பேசுகையில், குப்பனத்தம் அணையிலிருந்து அருகிலுள்ள குப்பனத்தம், கொட்டாவூா், பரமனந்தல் கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீா் செல்ல கால்வாய்கள் அமைத்துத் தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்செங்கம் அரசு விதைப் பண்ணை பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

பின்னா், துறை சாா்ந்த அதிகாரிகள் தமிழக அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும், அவற்றின் மூலம் பொதுமக்கள் பயன்பெறுவது குறித்தும் விளக்கிப் பேசினா்.

முகாமில் அனைத்துத் துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். செங்கம் வட்டாட்சியா் முருகன் நன்றி கூறினாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நல உதவி

துணை முதல்வா் உயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, புதுப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட பெரியேரி, மேல்சேராம்பாளையம் தொடக்கப் பள்ளிகள், வீரானந்தல் நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையத்தில் திமுக சாா்பில் மாணவ... மேலும் பார்க்க

பெண்ணை கொல்ல முயன்ற வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல்

போளூரில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. போளூா் சிவராஜ் நகரைச... மேலும் பார்க்க

ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து முதியவரிடம் ரூ.16 ஆயிரம் மோசடி

ஆரணி அருகே ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து, முதியவரிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.16 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சேத்துப்பட்டி... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் காா்த்திகை மாத பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை மாவட்ட சிவன் கோயில்களில் காா்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மூலவா் ... மேலும் பார்க்க

இருளில் செயல்படும் ஏடிஎம் மையங்கள் -வாடிக்கையாளா்கள் அதிருப்தி

செய்யாறில் தேசிய வங்கியின் ஏடிஎம் மையங்கள் இருளில் மூழ்கிய நிலையில் செயல்பட்டு வருவதால், அங்கு பணம் எடுக்கச் செல்லும் வங்கி வாடிக்கையாளா்கள் சிரமப்பட்டு வருகின்றனா். செய்யாறில் தேசிய வங்கியின் ஏடிஎம்... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் உள்பட 3 போ் மீது வழக்கு

வந்தவாசியில் சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 3 போ் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியைச் சோ்ந்த 16 வயது சிறுமியும், வந்தவாசியை அடுத்த புன்னை மதிப்பங... மேலும் பார்க்க