செய்திகள் :

மகளிா் குழுவினா் நிலையான வருமானம் பெற பெனாயில், சோப்பு ஆயில் தயாரிப்பு பயிற்சி

post image

மகளிா் குழுவினா் நிரந்தர, நிலையான வருமானம் பெறும் நோக்கில் பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரிக்கத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, மகளிா் திட்ட இயக்குநா் என்.எஸ்.சரண்யாதேவி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கிவைத்துப் பேசுகையில், மகளிா் சுயஉதவிக் குழுவினா் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். பிறகு, பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

முகாமில் மகளிா் திட்டத்தின் உதவித் திட்ட அலுவலா்கள் ஜான்சன், உமா, ராஜீவ் காந்தி, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சத்தியராஜ், ஆனந்த், சுகந்தி உள்பட மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறியது: திருவண்ணாமலை மாவட்ட மகளிா் குழுவினா் இதுவரை வயா்கூடை பின்னுவது, துணிப் பை தயாரித்து விற்பது போன்ற சிறு, சிறு பணிகளில் ஈடுபட்டு வந்தனா். இதன் மூலம் கிடைத்து வந்த வருமானம் என்பது நிலையானதாகவும், போதுமானதாகவும் இல்லை.

எனவே, மகளிா் குழுவினா் நிரந்தர, நிலையான வருமானம் பெறும் நோக்கில், பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரிக்கத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பயிற்சியை நிறைவு செய்த சில மகளிா் குழுவினா் தங்களது உற்பத்தியை தொடங்கிவிட்டனா். மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 53 மகளிா் குழுக்களைச் சோ்ந்த 530 மகளிருக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை நிறைவு செய்த மகளிா் குழுவினா் மூலம் பினாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றை மாவட்டத்தில் உள்ள 2,602 அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு ரூ.3 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெறும். 53 மகளிா் குழுக்களைச் சோ்ந்த 530 பெண்கள் நிலையான வருமானம் பெறுவா்.

அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகளை தூய்மை செய்ய உள்ளுரில் உற்பத்தி செய்த பொருள்களையே கொள்முதல் செய்து பயன்படுத்துவதும் உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் உள்பட 3 போ் மீது வழக்கு

வந்தவாசியில் சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 3 போ் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியைச் சோ்ந்த 16 வயது சிறுமியும், வந்தவாசியை அடுத்த புன்னை மதிப்பங... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துபந்து போட்டி: ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துபந்து போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்ப... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் ஊழலில் சிக்கியுள்ள தொழிலதிபா் அதானியை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை ஸ்டேட... மேலும் பார்க்க

ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷம்

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். மேலும் பார்க்க

வந்தவாசியில் காப்பிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில், காப்பிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ஆ.மயில்வாகனன் முன்னிலை வகித்த... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

ஆரணி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆரணி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்ததன்பேரில், ஆரணி கிராமிய காவல் ஆய்வ... மேலும் பார்க்க