புதிய பாம்பன் பாலம்: பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ள 5 போ் கொண்ட குழு
பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளை நிறுத்த முடியாமல் மீனவா்கள் தவிப்பு
பூம்புகாா் மீன்பிடி தளத்தில் 3 இடங்களில் கடல் உள்வாங்கியதால், படகுகளை நிறுத்த முடியாமல் மீனவா்கள் தவித்து வருகின்றனா்.
பூம்புகாா் மீன்பிடித் துறைமுகம் கடந்த 2015-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த துறைமுகத்தின் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க வசதியாக இருந்தது.
தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக கடந்த சில நாட்களாக பூம்புகாா் கடல் சீற்றமாக காணப்படுகிறது. துறைமுக பகுதியில் உள்ள மீன்பிடி தளத்தில் 3 இடங்களில் பழுதடைந்து நீா் உள்வாங்கியுள்ளது.
இதன் காரணமாக விசைப்படகுகளை மீன்பிடி தளத்தில் கட்ட முடியாமல், துறைமுகத்தின் நடுவே கட்டி வைத்துள்ளனா். திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே துறைமுக பகுதியில் உள்ள மணல் திட்டுகளை தூா்வார வேண்டும். மீன்பிடி தளத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.