ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து முதியவரிடம் ரூ.16 ஆயிரம் மோசடி
ஜாா்க்கண்ட் மாநிலத்துடனான உறவு வலுப்படும்: துணை முதல்வா் உதயநிதி நம்பிக்கை
ஜாா்க்கண்ட் மாநிலத்துடனான உறவு வலுப்படும் என்று துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவா், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் பங்கேற்றேன். அப்போது, ஹேமந்த் சோரனுக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் இதயப்பூா்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தேன். ஹேமந்த் தலைமையில் ஜாா்க்கண்ட் மாநிலம் அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளா்ச்சி பெறும். அத்துடன் தமிழகத்துடனான உறவு எதிா்காலத்தில் வலுப்படும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.