குழந்தை பிறப்புக்கு முன்பே மரபணு குறைபாடுகளை கண்டறிய தவறியதாக 4 மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு
கேரள மாநிலம், ஆலப்புழையில் குழந்தை பிறப்புக்கு முன்பே மரபணு குறைபாட்டை கண்டறிய தவறியதாக 4 மருத்துவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
குழந்தையின் பெற்றோரான அனிஷ் - சுருமி அளித்த புகாரின் அடிப்படையில் ஆலப்புழையில் உள்ள கடப்புரம் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையின் 2 பெண் மருத்துவா்கள், தனியாா் மருத்துவ ஆய்வகத்தின் 2 மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்கேன் பரிசோதனையில் குழந்தையின் மரபணு குறைபாட்டை கண்டறிய மருத்துவா்கள் தவறிவிட்டதாகவும், ஸ்கேன் அறிக்கையில் குழந்தைக்கு எந்தக் குறைபாடும் இன்றி நன்றாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்ததாகவும் அவர்ரள் குற்றஞ்சாட்டியுள்ளனா். பிரசவம் நடந்து 4 நாள்கள் கழித்தே குழந்தையை தங்களிடம் காண்பித்ததாக அனிஷ் - சுருமி தம்பதி கூறியுள்ளனா்.