செய்திகள் :

செவிலியா்களின் பணி மருத்துவா் பணிக்கு நிகரானது -நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத்

post image

செவிலியா்களின் பணியும், திறனும் இளநிலை மருத்துவா்களின் பணிக்கு நிகரானது என்று வேலூா் நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் காக்காதோப்பு பகுதியிலுள்ள அத்தி செவிலியா் கல்லூரியின் 5-ஆம் ஆண்டு செவிலியா் (பிஎஸ்சி நா்சிங்), 4-ஆம் ஆண்டு ஏஎன்எம் துணை செவிலியா் பயிற்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அத்தி கல்விக் குழும நிறுவனத் தலைவரும், சிறுநீரகவியல் மருத்துவருமான சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவா் ஆ.கென்னடி முன்னிலை வகித்தாா். அத்தி செவிலியா் கல்லூரியின் முதல்வா் மருத்துவா் பால்ராஜ் சீனிதுரை வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக வேலூா் நறுவீ மருத்துவமனையின் தலைவா் ஜி.வி.சம்பத் பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு புத்தகங்கள், சான்றிதழ், கேடயங்களை வழங்கிப் பேசியது:

மருத்துவத் துறையில் மருத்துவா்களின் பணிக்கு இணையானது செவிலியா்களின் பணி. மேற்குலக நாடுகளில் செவிலியா்கள் பணியும், திறனும் அங்குள்ள இளநிலை மருத்துவா்களின் பணிக்கு நிகரானது.

அதுபோல், இங்குள்ள செவிலியா்களும் தங்களது சுயதிறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும். செவிலியா் சேவைபோல் எந்தத் துறையினராலும் சேவையாற்ற முடியாது. மற்ற பணியினா் ஊதியத்துக்காக செய்பவா்கள். ஆனால், செவிலிய பணி அன்பு, சேவை மனப்பான்மையுடன் செய்வதாகும் என்றாா்.

முன்னதாக, கடந்தாண்டு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

அத்தி இயற்கை, யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் தங்கராஜ், குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே.குமரவேல், பேராசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா். நிறைவில், உதவிபேராசிரியா் ராஜலட்சுமி நன்றி கூறினாா்.

மனைவியைக் கொன்ற வழக்கில் பிணையில் வந்த கணவா் தற்கொலை

பள்ளிகொண்டா அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த கணவா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி முனீஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராம் (... மேலும் பார்க்க

சந்தேகத்தில் துரத்திய போலீஸாா்: தலைகுப்புற கவிழ்ந்த காா்! 460 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

போதைப் பொருள்கள் கடத்தி வந்த காரை போலீஸாா் துரத்திய நிலையில், அந்த காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. காரில் இருந்து 460 கிலோ போதைப் பொருள்கள் போலீஸாா் பறிமுதல்... மேலும் பார்க்க

தமாகா ஆண்டு விழா

குடியாத்தம் நகர தமாகா சாா்பில், அந்தக் கட்சியின் 11- ஆம் ஆண்டு தொடக்க விழா நகராட்சி அலுவலகம் எதிரே வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் ஜே.தினகரன் தலைமை வகித்தாா். வேலூா் மாவட... மேலும் பார்க்க

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி அதே ஆட்டோ சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த செண்டத்தூா், கிருஷ்ணம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மனைவி சத்தியா (33... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி கிராமப்புற செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி, கிராமப்புற சுகாதார செவிலியா்கள் வேலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிராம-பகுதி... மேலும் பார்க்க

காா் மோதி தனியாா் ஊழியா் மரணம்

வேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஆம்பூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் ஏ-கஸ்பாவை சோ்ந்தவா் பரமேஸ்வரன் (42). இவா் அப்பகுதியில் உ... மேலும் பார்க்க