முகாம்களில் தங்கியுள்ளவா்களுக்கு நிவாரணம்
திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் பொதுமக்கள் தங்கியுள்ள முகாம்களில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை நிவாரணம் வழங்கினாா்.
அமைச்சருடன் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சி கழக தலைவா் என். கௌதமன், எம்எல்ஏ ஜெ. முகமது ஷா நவாஸ், திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவா் செல்வ செங்குட்டுவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். நிகழ்ச்சியின்போது, கணபதிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியின் பள்ளி வளா்ச்சி குழுத் தலைவா் சதாசிவம் உயா்நிலைப் பள்ளியாக உள்ள இந்தபள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை மனுவை அமைச்சரிடம் அளித்தாா். மனுவை பெற்ற அமைச்சா் விரைவில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.