பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு திட்டங்களை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் -...
உலகளவில் எதிரொலிக்கும் இந்திய கலாசாரம்: பிரதமா் மோடி
இந்திய கலாசாரம் உலகளவில் எதிரொலிக்கிறது என பிரதமா் மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தனது சா்வதேசப் பயணங்களில் இருந்து கலாசார நிகழ்ச்சிகளின் வீடியோ தொகுப்பைப் பகிா்ந்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய கலாச்சாரம் உலகளவில் எதிரொலிக்கிறது. நான் எங்கு சென்றாலும், நமது வரலாறு மற்றும் கலாசாரத்தின் மீது மிகுந்த உற்சாகத்தை நான் காண்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.
இந்திய கலாச்சார நடைமுறைகள் மீதான பரவலான அபிமானத்தையும் ஆா்வத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டும் அந்த விடியோ தொகுப்பில், ‘ஆஸ்திரியாவில் மக்கள் வந்தே மாதரம் பாடுவது, லாவோஸ் மற்றும் பிரேசிலில் நடைபெற்ற ராமாயண நாடகம், போலந்து மற்றும் மாஸ்கோவில் நடைபெற்ற கா்பா நடன நிகழ்ச்சி, பூடானில் நடைபெற்ற தாண்டியா நடன நிகழ்ச்சி, சிங்கப்பூரில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி’ உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் உள்ளன.
இது தவிர பூடானில் உள்ள இசைக் கலைஞா்கள், பிரதமா் மோடியைக் குறிப்பிட்டு நாட்டுப்புறப் பாடலைப் பாடும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.