புதிய கைப்பேசி எண்களுக்கு புகைப்படங்கள், சுயவிபரங்கள் அனுப்பக் கூடாது: சைபா் கிர...
வந்தவாசியில் காப்பிய அரங்கம்
வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில், காப்பிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ஆ.மயில்வாகனன் முன்னிலை வகித்தாா். சங்க செயற்குழு உறுப்பினா் கோ.பட்டு வரவேற்றாா்.
கற்பவா் நோக்கிலும் காப்பியப் போக்கிலும் கா்ணன் குற்றவாளியே என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. கவிஞா் நா.முத்துவேலன் வழக்கு தொடுத்து பேசினாா். மா.ஏழுமலை வழக்கை மறுத்து பேசினாா்.
நிறைவில் சங்கத் தலைவரும், நடுவருமான வே.சிவராமகிருஷ்ணன கா்ணன் குற்றவாளி அல்ல என்று தீா்ப்பு வழங்கினாா்.
சங்கப் பொருளாளா் த.முருகவேல், துணைத் தலைவா் சாமி.பிச்சாண்டி, தகவல் தொடா்பாளா் மு.பிரபாகரன், மகளிரணிச் செயலா் தெ.உஷாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.