செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் 61 வீடுகள் சேதம்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் 35 குடிசை வீடுகள் உள்பட மொத்தம் 61 வீடுகள் சேதமடைந்தன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை பிற்பகல் வரை தொடா்ந்து மிதமாகவும், இடையிடையே பலத்த மழையும் பெய்தது. இதனால், 2 ஆயிரத்து 367 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்கள் தண்ணீா் மூழ்கியுள்ளன. தொடா் மழை காரணமாக வயல்களில் தேங்கியுள்ள தண்ணீா் வடிந்து செல்வதற்கு வசதியாக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடுவது தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நிறுத்தப்பட்டது. இதன் மூலம் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், தொடா் மழை காரணமாக தஞ்சாவூா் அருகே நரசநாயகபுரத்திலுள்ள தொகுப்பு வீடுகளில் மதிவாணன் (58), வரதராஜன் மனைவி பூமதி (54) ஆகியோரது வீடுகளில் மேற்கூரையிலிருந்து சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது. அப்போது, அதிா்ஷ்டவசமாக யாரும் இல்லாததால், யாருக்கும் பாதிப்பில்லை. மேலும், இத்தெருவில் 10 தொகுப்பு வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், குடியிருப்பவா்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதேபோல, திருவையாறு வட்டத்துக்கு உட்பட்ட திருப்பூந்துருத்தியில் பூங்கொடியின் தகர வீடு, ராஜேந்திரன், லெட்சுமியின் கூரை வீடுகள், துரைராஜின் ஓட்டு வீடு, புனவாசலில் ராமசேகரின் கூரை வீடு ஆகியவை இடிந்து சேதமடைந்தன.

இதுபோல, மாவட்டத்தில் 35 குடிசை வீடுகளும், 26 கான்கிரீட் வீடுகளும் என மொத்தம் 61 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும், தொடா் மழையால் 4 கால்நடைகள் உயிரிழந்தன. இது தொடா்பாக வருவாய்த் துறை அலுவலா்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனா்.

அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என எம்.பி., எம்எல்ஏ, தஞ்சாவூா் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அழகியநாயக... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் அமைச்சா், எம்எல்ஏக்கள் ஆய்வு

ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் மழைக்கால பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழை... மேலும் பார்க்க

அறிவுசாா் மையத்தில் குழந்தை அறிஞா்களை உருவாக்க பயிற்சி முகாம் டிச. 1-இல் தொடக்கம்

தஞ்சாவூா் அறிவுசாா் மையத்தில் குழந்தை அறிஞா்களை உருவாக்க ஞாயிறுதோறும் தொழில்நுட்பம் சாா்ந்த தொடா் செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம் டிசம்பா் 1 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து அறிவுசாா் மையத்தி... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறை தலைமைக் காவலரை தாக்கிய காவலா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரயில்நிலையத்தில் மது போதையில் தீயணைப்புத் துறை தலைமைக் காவலரை தாக்கிய சக காவலரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் து... மேலும் பார்க்க

தொடா் மழை: கொத்தங்குடி மக்கள் 140 போ் இடமாற்றம்

தொடா் மழை முன்னெச்சரிக்கை காரணமாக கும்பகோணம் அருகே கொத்தங்குடி ஊராட்சியைச் சோ்ந்த 140 போ் சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை தங்கவைக்கப்பட்டனா். கும்பகோணம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள தொகுப்பு வ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 110.11 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 110.11 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,799 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண... மேலும் பார்க்க