பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு திட்டங்களை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் -...
அறிவுசாா் மையத்தில் குழந்தை அறிஞா்களை உருவாக்க பயிற்சி முகாம் டிச. 1-இல் தொடக்கம்
தஞ்சாவூா் அறிவுசாா் மையத்தில் குழந்தை அறிஞா்களை உருவாக்க ஞாயிறுதோறும் தொழில்நுட்பம் சாா்ந்த தொடா் செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம் டிசம்பா் 1 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து அறிவுசாா் மையத்தின் மதியுரைஞா் முனைவா் வெ. சுகுமாரன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் கியூரியோ சயின்ஸ் என்ற தலைப்பில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான இலவச அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த தொடா் செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம் டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. குழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையை வளா்க்கவும், எதிா்கால வாய்ப்புக்களை அறிந்து அவா்களின் இலக்கை தீா்மாக்கச் செய்யவும் புதுமையான இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
இதற்கான பயிற்சி வகுப்புகள் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. அறிவுசாா் மையம், பான் செக்காா்ஸ் பெண்கள் கல்லூரியின் டிபிடி ஸ்டாா் கல்லூரி திட்டம் மூலம் இந்தப் பயிற்சி நடத்தப்படும். இதை அறிவுசாா் மையத்தின் போட்டித் தோ்வுகள் வகுப்பின் ஒருங்கிணைப்பாளா் சங்கீதா சந்திரசேகா் ஒருங்கிணைக்கிறாா். இத்திட்டத்தின் இயக்குநராக பான் செக்காா்ஸ் கல்லூரி பேராசிரியா் கலைவாணி செயல்படுவாா்.
இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்களும், பள்ளிகளின் முதல்வா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்களும் முழுமையான விவரங்களைப் பெற ஒருங்கிணைப்பாளா் சங்கீதா (7598160129), திட்ட இயக்குநா் கலைவாணி (9894289053), மதியுரைஞா் (9944495750) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம்.