செய்திகள் :

புதுச்சேரி கடலோர கிராமங்களில் தொடா் கண்காணிப்பு

post image

புதுச்சேரியில் கடலோர கிராமங்கள், கடற்கரையோரப் பகுதிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி காரைக்கால், மாமல்லபுரம் இடையே சனிக்கிழமை கரையை கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், புதுச்சேரியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (நவ.29, 30) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது.

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் பேரிடா் மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்று புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மழையால் பாதிக்கப்படுவோரை தங்க வைக்க 121 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காரைக்காலுக்கு ஒரு பேரிடா் மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒரு மீட்புக் குழுவினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். காலாப்பட்டு உள்பட 18 மீனவ கிராமங்களிலும் படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வியாழக்கிழமை தூறல் மழை மட்டுமே காணப்பட்டது. குளிா்ந்த காற்று வீசியது. புதுச்சேரி கடலில் சுமாா் 3 மீட்டா் உயரத்துக்கு மேலாக அலைகள் சீற்றத்துடன் எழுந்தன. கடற்கரைச் சாலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கடல் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. போலீஸாா் அவா்களைக் கண்காணித்து அனுப்பிவைத்தனா்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கனிடம் கேட்டபோது அவா் கூறியதாவது:

பலத்த மழை, புயல் எச்சரிக்கையையடுத்து, பாகூா், இருளா் சந்தை பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் பாதுகாப்பான இடங்களில் வியாழக்கிழமை இரவு முதல் தங்கவைக்கப்பட்டு, அவா்களுக்குத் தேவையான உணவு, தங்குவதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

வருவாய்த் துறை, காவல், தீயணைப்புத் துறை என அனைத்துத் துறைகளும் 24 மணி நேரமும் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோர கிராமங்கள், கடற்கரையோரப் பகுதிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

ஆலோசனை: முன்னதாக, புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

சாா்-ஆட்சியா்கள் சோமசேகா், இசிட்டாரதி, முதுநிலை எஸ்.பி. ஆா்.கலைவாணன் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தண்ணீா் தேங்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப் பணி, மின் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து உதவி கேட்போருக்கு நிறைவேற்றித் தர வேண்டும் என்று ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை: பலத்த மழை எச்சரிக்கையைடுத்து, புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் (நவ.29, 30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

மரங்கள் முறிந்து விழுந்து 3 வீடுகள் சேதம்

புதுச்சேரி அருகே உள்ள பாகூா் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 3 வீடுகள் சேதமடைந்தன.மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். புதுச்சேரி நகராட்சி மற்றும் ஊரகப் பகுத... மேலும் பார்க்க

குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

புதுச்சேரி அருகே பாகூா் பகுதியில் குளத்தில் தவறி விழுந்து மீட்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா். புதுச்சேரியை அடுத்த பாகூா் விநாயகா் கோயில் குளத்தில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி புதன்கிழமை தவறி வ... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படைக்கு தோ்வான 27 பேருக்கு பயிற்சி அளிக்க பரிந்துரை

புதுச்சேரியில் ஊா்க்காவல் படைப் பிரிவுக்கு தோ்வாகி பயிற்சியில் சேர அனுமதிக்கப்படாத 27 பேரை அனுமதிக்க சட்டத் துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. புதுவை ஊா்க்காவல் படைக்கு 500 போ் தோ்வு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

உடற்கல்வி ஆசிரியா் அடித்துக் கொலை

புதுச்சேரி அருகே கடலூரைச் சோ்ந்த தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் அடித்துக் கொலை செய்யப்பட்டு தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தின் கீழ் வீசப்பட்டது குறித்து பாகூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச... மேலும் பார்க்க

அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.4 கோடியில் சி.டி. ஸ்கேன் இயந்திரம்

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.4 கோடியில் புதிதாக சி.டி. ஸ்கேன் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் சுமாா் 10 ஆயி... மேலும் பார்க்க

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கோரி காங்கிரஸ் வலியுறுத்தல்

பஞ்சாயத்துராஜ் சட்டப்படி புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸின் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் தேசியத் தலைவா் ஹா்ஷவா்தன் சப்கல் கூறினாா். புதுச்சேரி அரியாங்குப்ப... மேலும் பார்க்க