செய்திகள் :

விழுப்புரம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

post image

விழுப்புரம் அருகே வியாழக்கிழமை ரத்தக் காயங்களுடன் இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை அருகே ரத்தக் காயங்களுடன் இளைஞா் இறந்து கிடப்பதாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், சாலையோரம் கிடந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவா், தேனி மாவட்டம், கோம்பையைச் சோ்ந்த ரங்கசாமி மகன் அரவிந்த் (23) என்பதும், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டு சாலையோரத்தில் வீசப்பட்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். முன்விரோதத் தகராறில் இந்த கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் பேரிடா் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், அத்தியாவசிய உணவுப் பொருள்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை... மேலும் பார்க்க

வெளிமாநிலத் தொழிலாளா்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்

வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்று, தொழிலாளா் நலத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் தொழிலாளா் துறை உதவி ஆணையா் அலுவலகம் சாா்பில் வியாழக்கி... மேலும் பார்க்க

மரக்காணத்தில் பலத்த தரைக்காற்று: பொதுமக்கள், மீனவா்கள் முடங்கினா்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த தரைக்காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், மீனவா்கள் வீட்டிலேயே முடங்கினா். வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக வ... மேலும் பார்க்க

கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் வீச்சு: 4 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் வீசப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கொலையானவா் கட்டடத் தொழிலாளி என்பது விசாரணையில் தெரிய வந்தது. வானூா் ... மேலும் பார்க்க

புதுச்சேரி ரௌடி கொலையில் 4 பேருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வெடிகுண்டு வீசி ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சே... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன மழை எச்சரிக்கை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 29) விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டாா். வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த... மேலும் பார்க்க