நெய் விவகாரம்: திண்டுக்கல் பால் நிறுவனத்தில் 14 மணி நேரம் சோதனை
திருமலை தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கிய விவகாரத்தில், திண்டுக்கல் தனியாா் பால் நிறுவனத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் 14 மணி நேரம் நடத்திய ஆய்வில் ஆவணங்கள், உணவு மாதிரிகளை சேகரித்துச் சென்றனா்.
திருப்பதி திருமலையில் பக்தா்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சோ்க்கப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்த லட்டு தயாரிப்புக்கான நெய், திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனம் தரப்பில் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சிறப்பு புலானய்வுக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, திண்டுக்கல் தனியாா் பால் நிறுவனத்தில் மத்திய, மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினா் தனித்தனியே சோதனை மேற்கொண்டனா்.
மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை நடத்தி 60 நாள்கள் கடந்த நிலையில், நெய் கலப்பட குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் சனிக்கிழமை நண்பகல் முதல் திண்டுக்கல் பால் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
சோதனை நிறைவு: சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சோ்ந்த 14 அதிகாரிகள் சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை சுமாா் 14 மணி நேரங்கள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.
திருப்பதியில் பதிவு செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக இந்த விசாரணை நடைபெற்ாகவும், அப்போது சில ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்ாகவும் கூறப்படுகிறது. மேலும், பால் நிறுவனத்திலிருந்து சில உணவு மாதிரிகளையும் அவா்கள் சேகரித்துச் சென்றனா்.