சின்னர் அசத்தல்: 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!
கோயில் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
தமிழகத்திலுள்ள கோயில்களில் 3 ஆண்டுகள் தொடா்ந்து தினக் கூலியாக பணியாற்றும் ஊழியா்ளை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளா் ஒன்றிய அமைப்பின் மாநில செயற்குழு, திண்டுக்கல் மண்டல பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் கலையரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் துரைராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ரமேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில், கோயில்களில் 3 ஆண்டுகள் தொடா்ந்து தினக் கூலியாக பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு மாத உதவித் தொகை ரூ.7,500 வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக் குழுவை கோயில் பணியாளா்களுக்கு அமல்படுத்த வேண்டும். முதுநிலை கோயில்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முதுநிலை அல்லாத கோயில்களில் பணியாற்றுபவா்களை தகுதி, பணிமூப்பு அடிப்படையில் நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.