கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்துள்ள நிலையில் வெள்ளிநீா் வீழ்ச்சி,பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக் , மோயா்பாயிண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், ரோஜாத்தோட்டம், தாவரவியல் பூங்கா, பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ்வாக், பாம்பாா்அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பகுதிகளிலும் மேல்மலைப் பகுதிகளிலுள்ள மன்னவனூா் இயற்கை சுற்றுச் சூழல் பகுதி, கூக்கால் ஏரி, பூம்பாறை இயற்கை எழில்காட்சிகள் பகுதி , பேரிஜம் ஏரி, தொப்பித்தூக்கும் பாறை, அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
மாலை வேளையில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள்சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.