பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி, பைரவருக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி, 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்தச் சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.