செய்திகள் :

திமுக கூட்டணியில் பங்கு உண்டு; ஆட்சியில் கிடையாது: அமைச்சா் இ.பெரியசாமி

post image

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு பங்கு (தொகுதிப் பங்கீடு) அளிப்போம்; ஆனால், ஆட்சியில் பங்கு கிடையாது என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துாா் ஒன்றியம், பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உண்டு. ஆனால், ஆட்சியில் பங்கீடு கிடையாது. திமுகவை பொருத்தவரையில், ஒரே கருத்துடைய இயக்கங்களான காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 1967-இல் இருந்து தொடா்ந்து கூட்டணியில் உள்ளன.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு வழங்கியது கிடையாது. கூட்டணியில் பங்கு இருக்கும். ஆட்சியில் எப்போதும் பங்கு கொடுத்தது இல்லை.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே முதல்வா் மு.க.ஸ்டாலின்தான்.

போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க முதல்வா் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறாா். இதேபோல, சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டுவதிலும் உறுதியாகச் செயல்பட்டு வருகிறாா். தமிழக காவல் துறை தலைமை இயக்குநரை மட்டுமல்லாமல், அமைச்சா்கள், முதல்வரையும் தனி மனிதா்களும் எளிதாகச் சந்திக்கலாம் என்றாா் அவா்.

முன்னதாக, தூய்மைப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு அமைச்சா் சால்வை அணிவித்து கௌரவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் நடராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாஸ்கரன், ஆத்தூா் ஒன்றியத் தலைவி மகேஸ்வரி முருகேசன், துணைத் தலைவி ஹேமலதா மணிகண்டன், ஆத்தூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தட்சிணாமூா்த்தி, அருள் கலாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழனி கோயில் அலுவலருடன் பாஜகவினா் வாக்குவாதம்

பழனி கோயில் விடுதியில் பாஜக நிா்வாகிகளுக்கும், கோயில் அலுவலருக்கும் இடையே சனிக்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அரசியல் கட்சியினா், அலுவலா்கள் ... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு டி.3-இல் பேச்சுப் போட்டி

ஜவாஹா்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி டிச.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட ச... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி, பைரவருக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி, 6 கால சிறப்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு லாரி மோதியதில் விவசாய கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னமல்லையாபுரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (67). இவா் இரு சக்கர ... மேலும் பார்க்க

பழங்குடியினா்களுக்கு வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டும் முகாம்

கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியில் பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், கெளரவநாச்சி ஓடை, குவர... மேலும் பார்க்க

விதிமுறை மீறல்: கொடைக்கானலுக்கு வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பிவைப்பு

கொடைக்கானலுக்கு செல்ல முயன்ற 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்துத் துறை பறக்கும் படை அதிகாரிகள் திருப்பிஅனுப்பிவைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொட... மேலும் பார்க்க