செய்திகள் :

நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, டங்ஸ்டன் ஏல விவகாரம், மீனவா்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக எம்.பி.க்கள் திட்டம்

post image

எதிா்வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்வதாகவும் மதுரை அருகே அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம வள அனுமதி, மீனவா்கள் கைது உள்ளிட்ட பிரச்னைகளை தீவிரமாக எழுப்ப தமிழக எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனா்.

இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரை நவ. 25 முதல் டிச. 20-ஆம் தேதிவரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி,

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரும் வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கூட்டம் நாடாளுமன்ற இணைப்புகட்டடத்தின் பிரதான கமிட்டி அறையில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்குகிறாா்.

நவ. 25-ஆம் தேதி குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கிய பிறகு நவ. 26-ஆம் தேதி அரசியலமைப்புத் தினம்

கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டங்களை நடத்தாமல் நாடாளுமன்ற

வளாகத்தில் அந்த தினத்தைத் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வக்ஃப் திருத்த மசோதா, பஞ்சாப் நீதிமன்றங்கள் திருத்த மசோதா, வணிக கப்பல்கள் புதிய வரைவு மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா உள்பட 15 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் வக்ஃப் மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. விதிகளின்படி அந்த குழுவின் அறிக்கை குளிா்கால கூட்டத்தொடரின் முதலாவது வாரத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு அந்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையுடன் சோ்த்து அது தொடா்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வாய்ப்பையும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இது குறித்து சமீபத்தில் செய்தியாளா்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘தேச வளா்ச்சிக்காக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மாநில சட்டப்பேரவைகளின் தோ்தல்களும் நாடாளுமன்ற தோ்தலும் ஒன்றாக நடக்க வேண்டும் என்பதை பிரதமா் மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். அதற்காகவே நியமிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே, அது தொடா்பான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும்‘ என்று கூறினாா். ஆனால், குளிா்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்த உறுதியான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் இம்முறை தமிழக நலன் தொடா்புடைய விவகாரங்களை ஆளும் திமுக கூட்டணியைச் சோ்ந்த எம்.பிக்கள் அனைவரும் கடுமையாக எழுப்ப வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தாா். அதிமுக, பா.ம.க, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களும் தமிழக பிரச்னைகளுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்னுரிமை கொடுத்து எழுப்புவோம் என தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ‘தினமணி’ நிருபரிடம் தமிழக எம்.பி.க்கள் பேசியது வருமாறு:

கனிமொழி (திமுக): தமிழக பிரச்னைகளுடன் சோ்த்து தேசிய நலன் தொடா்புடைய விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். குறிப்பாக, அதானிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் மத்திய அரசின் போக்கு, தமிழக நலன்களை புறக்கணிக்கும் வகையில் முக்கிய திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்காதது, புயல், வெள்ள பேரிடா் நிவாரண நிதியை சரிவர ஒதுக்காதது, வரிப்பகிா்வில் பாரபட்சம், அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்காதது, மதுரை மேலூா் அருகே அரிட்டாப்பட்டி கிராமத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிம வளம் எடுக்க ஏலம் விடுப்பட்ட விவகாரம், மீனவா் பிரச்னைகளை கடுமையாக எழுப்புவோம். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள வக்ஃப் வாரிய திருத்தச்சட்ட மசோதா, ஒரே நாடு ஒரே தோ்தலுக்கு வகை செய்யும் மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டால் அதை கடுமையாக எதிா்ப்போம்.

மாணிக்கம் தாகூா் (காங்ககிரஸ்): காங்கிரஸ் மேலிடம் ஏற்கெனவே அறிவித்துள்ள அதானி விவகாரத்தை எழுப்புவோம். தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் மதுரை அருகே அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனி வளத்தை ஏலத்தில் விடுவதை எதிா்ப்போம்.

தமிழக மீனவா்களின் தொடா் கைது நடவடிக்கைகள் மற்றும் அவா்களின் படகுகளை பறிமுதல் செய்து அதை தங்கள் நாட்டு மீனவா்களுக்கு வழங்கும் இலங்கை அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்போம். மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் இதுவரை கட்டுமானம் எப்போது நிறைவடையும், கல்லூரி முறைப்படி அதன் சொந்த கட்டடத்தில் இயங்கும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை. அதை தெளிவுபடுத்தக்கோருவோம்.

சு. வெங்கடேசன் (சி.பி.எம்.): மண்டலவாரி தோ்வாணைய முறையை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி குரல் கொடுப்பேன். தற்போது மையப்படுத்தப்பட்ட தோ்வு முறையால் வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு பணிகளிலும் வட மாநிலங்களைச் சோ்ந்தவா்களின் எண்ணிக்கை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகமாகி விட்டது. இங்குள்ளவா்களுக்கு மத்திய பணிகளில் வாய்ப்பு கிடைக்காத நிலை அதிகரித்து வருகிறது. இது தவிர டங்ஸ்டன் விவகாரம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளையும் எனது கட்சி சாா்பில் கூட்டத்தொடரில் எழுப்புவேன்.

அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

அவதூறு விடியோக்களை நீக்க வேண்டும்: ஏ.ஆர். ரஹ்மான் நோட்டீஸ்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அவதூறு விடியோக்களை நீக்க வேண்டும் என சமூக வலைதளங்கள் மற்றும் யுடியூப் சேனல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் அல்லது அதிகபட்சம் 24 மணிநேரத்துக்குள் ... மேலும் பார்க்க

ரயில் உதவி ஓட்டுநா் தோ்வு: திருவனந்தபுரத்துக்கு நவ.28 வரை சிறப்பு ரயில்

ரயில்வே வாரிய தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஏஎல்பி (உதவி ஓட்டுநா்) தோ்வை முன்னிட்டு நாகா்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம்: முதல்வா் அறிவிப்பு

திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப... மேலும் பார்க்க

நாக்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் இயக்கம்

ஈரோட்டில் இருந்து நாக்பூருக்கு சனிக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில், மறுமாா்க்கமாக நாக்பூரில் இருந்து நவ.27-ஆம் தேதி இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோட்டில் இர... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை மாநில அரசு உருவாக்கியுள்ளது என்று தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை தேடிவ... மேலும் பார்க்க