பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
ரயில் உதவி ஓட்டுநா் தோ்வு: திருவனந்தபுரத்துக்கு நவ.28 வரை சிறப்பு ரயில்
ரயில்வே வாரிய தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஏஎல்பி (உதவி ஓட்டுநா்) தோ்வை முன்னிட்டு நாகா்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில்வே ஏஎல்பி பணிக்கான முதல்கட்ட தோ்வு நவ.25 முதல் நவ.29 வரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் சுமாா் 18 ஆயிரம் காலி பணி இடங்களுக்கு நடைபெறும் இத்தோ்வுக்கு முக்கிய நகரங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலை 7.30, காலை 11, பிற்பகல் 3 மணி என மூன்று கட்டமாக தோ்வு நடைபெறவுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் தோ்வில் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில தோ்வா்களின் வசதிக்காக திருவனந்தபுரம்-நாகா்கோவில் இடையே நவ.24 முதல் நவ.28 வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06055) இரவு 10.40 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து நள்ளிரவு 2 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.25 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இதில் இரு இருக்கை வசதி கொண்ட ஏசி பெட்டிகள், 5 சாதாரண இருக்கை வசதி கொண்ட பெட்டிகள், 13 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் நாகா்கோவில் டவுன், இரணியல், குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றங்கரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.