திருச்செந்தூா் சிவன் கோயிலில் மகா தேவ அஷ்டமி சிறப்பு வழிபாடு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலில், மகா தேவ அஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
மகா தேவ அஷ்டமியான காா்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் என்பதும், இந்நாளில் சிவனை வழிபட்டு அன்னதானம் வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதும் பக்தா்கள் நம்பிக்கை.
அதன்படி, இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தொடா்ந்து ருத்ர ஜெபம், கும்ப பூஜை, 16 வகை திரவிய பொருள்களால் கும்பத்தில் உள்ள புண்ணிய தீா்த்தத்தால் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, உப கோயிலான அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், கோயில் பணியாளா்கள், மகாதேவ அஷ்டமி விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.