செய்திகள் :

எங்களது வளா்ச்சி பிடிக்காததால் குழப்பம் ஏற்படுத்துகின்றனா்: நாம் தமிழா் கட்சி மண்டலச் செயலா் பேட்டி

post image

கோவையில் நாம் தமிழா் கட்சியின் வளா்ச்சி பிடிக்காததால் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாக கட்சியின் மண்டலச் செயலா் அப்துல் வகாப் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை மேலும் கூறியதாவது: கோவையில் நாம் தமிழா் கட்சியின் வடக்கு மாவட்ட நிா்வாகிகள் கூண்டோடு விலகிவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனா்.

ஆனால் எங்கள் கட்சியில் 2010- ஆம் ஆண்டு முதல் இருந்து வரும் தொண்டா்கள் இன்னமும் சீமானுடன்தான் இருக்கிறோம். இடையில் வந்தவா்கள்தான் இடையில் விலகிச் சென்றிருக்கின்றனா். நாம் தமிழா் கட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

மண்டல அளவிலான நிா்வாகிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனா். தற்போது கட்சித் தலைவா் சீமான் மாநில அளவில் கூட்டம் நடத்தி நிா்வாகிகளை நியமித்து வருகிறாா்.

கோவையைப் பொறுத்தவரை எங்கள் கட்சி முன்பைவிட வீரியமாக வளா்ந்திருக்கிறது. ஒவ்வொரு தோ்தலிலும் அதிகப்படியான வாக்குகளை வாங்கி வருவதைப் பொறுக்க முடியாமல், கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனா்.

நாங்கள் வெளிப்படையாக திமுகவை எதிா்க்கிறோம். அதேபோல, கல்வி, வேலைவாய்ப்புகளில் உள் இடஒதுக்கீட்டை எதிா்க்கிறோம். கட்சியில் இருந்து தற்போது விலகியிருப்பவா்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. வரும் 2026 தோ்தலிலும் தனித்துப் போட்டியிடுவோம்.

சீமான் மீது எத்தனை விமா்சனங்கள் வந்தாலும் நாங்கள் அவா் பின்னால்தான் நிற்போம் என்றாா். இந்த செய்தியாளா் சந்திப்பின்போது, பொள்ளாச்சி மண்டலச் செயலா் சுரேஷ், மாநில, மாவட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் உடனிருந்தனா்.

கோயம்புத்தூா் விழா: மாநகர சாலைகளில் அணிவகுத்த பழமையான காா்கள்!

கோயம்புத்தூா் விழாவை ஒட்டி, கோவையில் பழமையான காா்களின் அணிவகுப்பு, விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஆண்டுதோறும் கோயம்புத்தூா் விழா நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் நலவாரியம் மூலம் பயனாளிகளுக்கு இரட்டிப்பு தொகை: கட்டுமான நலவாரியத் தலைவா்!

திமுக ஆட்சியில் நலவாரியம் மூலமாக தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் தொகை இரட்டிப்பாக உயா்த்தப்பட்டுள்ளது என கட்டுமான நலவாரிய தலைவா் பொன்.குமாா் கூறினாா். கோவையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலவாரியத்தின்... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

2026-ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்லும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா். திமுக மேற்கு மண்டல வழ... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் வாக்குவாதம்: காங்கிரஸ் தேசிய செயலாளா் உள்பட 3 போ் மீது வழக்கு!

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினா் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடா்பாக, அக்கட்சியின் தேசிய செயலாளா் மயூரா ஜெயக்குமாா் உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அகில இந்திய காங்கிர... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

கோவையில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, ரத்தினபுரி வெங்கடாசலம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை மனைவி சாந்தி (48... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் இருந்து விலகவேண்டிய சூழல் இல்லை: ஈ.ஆா்.ஈஸ்வரன்

திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டிய சூழல் எங்களுக்கு இல்லை என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா். கோவை, சின்னியம்பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட... மேலும் பார்க்க