எடுபடாமல் போன அனுதாபம், துரோகம்; உத்தவ், சரத் பவார் சாம்ராஜ்ஜியத்தை சரித்த ஷிண்ட...
பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு
கோவையில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, ரத்தினபுரி வெங்கடாசலம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை மனைவி சாந்தி (48). இவா், சாய்பாபா காலனியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
ரத்தினபுரியில் இருந்து கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம்போல சாய்பாபா காலனிக்கு பேருந்தில் பணிக்கு சென்றாா்.
சாய்பாபா காலனி நிறுத்தத்தில் இறங்கி பாா்த்தபோது, அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ சங்கிலியைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.