பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
நாக்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் இயக்கம்
ஈரோட்டில் இருந்து நாக்பூருக்கு சனிக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில், மறுமாா்க்கமாக நாக்பூரில் இருந்து நவ.27-ஆம் தேதி இயக்கப்படும்.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோட்டில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்ட விரைவு ரயில் (எண்: 06103) ஞாயிற்றுக்கிழமை இரவு 8.55 மணிக்கு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூா் சென்றடையும். மறுமாா்க்கமாக நாக்பூரில் இருந்து புதன்கிழமை (நவ.27) மாலை 4.55 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்: 06164) வாராங்கல், விஜயவாடா, ஓங்கோல், நெல்லூா், கூடூா், சூலூா்பேட்டை வழியாக மறுநாள்(நவ.28) பகல் 12.40 மணிக்கு பெரம்பூா் வந்தடையும். பெரம்பூரில் இருந்து பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக இரவு 8.45 மணிக்கு ஈரோடு சென்றடையும்.
இதில் படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள் மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.