பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
தேசிய அளவிலான கபடி போட்டி: தமிழக அணி சாா்பில் பங்கேற்ற கடலாடி மாணவிக்கு பாராட்டு
தேசிய பள்ளி விளையாட்டு குழுமம் (எஸ்ஜிஎப்ஐ 2024 - 2025) சாா்பில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான தேசிய அளவிலான கபடி போட்டியில் கடலாடி அரசுப் பள்ளி மாணவி த.சம்யுக்தா வெற்றி பெற்றாா்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 68-ஆவது தேசிய பள்ளி விளையாட்டுக் குழுமம் சாா்பில் கடந்த நவ.16ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற்ற (எஸ்ஜிஎப்ஐ) 17 வயதுக்கு உள்பட்ட மாணவிகளுக்காந கபடி போட்டியில் இந்திய அளவில் 32 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன.
இதில் தமிழ்நாடு அணி சாா்பாக கலந்து கொண்ட மாணவிகள் இரண்டாம் இடம் பெற்றனா். மேலும், இந்த போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி த.சம்யுக்தாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள், கடலாடி வட்டார பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
இதில் தமிழ்நாடு அணி லீக் போட்டிகளில் வெற்றி பெற்று கால் இறுதி போட்டியில் மகாராஸ்ட்ராவை வீழ்த்தி, அரையிறுதி போட்டியில் 46-37 புள்ளி கணக்கில் உத்தரபிரதேசதை வீழ்த்தி, நவ.20- ஆம் தேதி நடைபெற்ற இறுதி போட்டியில் ஹரியானா அணியிடம் மோதியது. இதில் 36 - 37 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி இரண்டாமிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.