தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து
ராமநாதபுரத்தில் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் தனியாா் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் மின் பிரிவு அறையில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் குளிா்சாதன வசதி உள்ள அறைகளுக்கும் பரவியது. இதனால், சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகள் அவசரமாக வெளியேறினா்.
இதுகுறித்து தகவலறிந்த ராமேஸ்வரம் தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்து 10- க்கும் மேற்பட்ட நோயாளிகளை மீட்டனா். இதுகுறித்து கடைவீதி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.