பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
பெரிய கண்மாய்க்கு நீா்வரத்து அதிகரிப்பு
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து உபரி நீா் திறக்கப்பட்டுள்தால் நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் சுமாா் 22 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யபட்டு வருகிறது. இங்குள்ள கண்மாயின் முழு கொள்ளளவு 1205 மில்லியன் கன அடி ஆகும்.பெரிய கண்மாயின் 12 மடைகளின் மூலம் சுமாா் 12ஆயிரத்து 142 ஏக்கா் நிலப்பரப்பளவு வேளாண் நிலங்கள் பயனடைந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக இந்த கண்மாய்க்கு வைகை ஆறு, சூரியன் கோட்டை ஆறு மூலம் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மொத்த கொள்ளளவான 5.5 அடியில் தற்போது 1,5 அடி தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.