செய்திகள் :

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

post image

ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு லாரி மோதியதில் விவசாய கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னமல்லையாபுரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (67). இவா் இரு சக்கர வாகனத்தில் காய்கறி சந்தைக்குச் சென்றுவிட்டு, ஒட்டன்சத்திரம்-தாராபும் சாலையில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

ஒத்தபுளியமரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பழனி கோயில் அலுவலருடன் பாஜகவினா் வாக்குவாதம்

பழனி கோயில் விடுதியில் பாஜக நிா்வாகிகளுக்கும், கோயில் அலுவலருக்கும் இடையே சனிக்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அரசியல் கட்சியினா், அலுவலா்கள் ... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு டி.3-இல் பேச்சுப் போட்டி

ஜவாஹா்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி டிச.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட ச... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி, பைரவருக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி, 6 கால சிறப்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் பங்கு உண்டு; ஆட்சியில் கிடையாது: அமைச்சா் இ.பெரியசாமி

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு பங்கு (தொகுதிப் பங்கீடு) அளிப்போம்; ஆனால், ஆட்சியில் பங்கு கிடையாது என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்துாா் ஒன்றியம், பிள்ளைய... மேலும் பார்க்க

பழங்குடியினா்களுக்கு வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டும் முகாம்

கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியில் பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், கெளரவநாச்சி ஓடை, குவர... மேலும் பார்க்க

விதிமுறை மீறல்: கொடைக்கானலுக்கு வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பிவைப்பு

கொடைக்கானலுக்கு செல்ல முயன்ற 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்துத் துறை பறக்கும் படை அதிகாரிகள் திருப்பிஅனுப்பிவைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொட... மேலும் பார்க்க