செய்திகள் :

நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்

post image

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதி விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சோழவந்தானை அடுத்த இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையம் வெள்ளிக்கிழமை திடீரென மூடப்பட்டது. அறுவடைப் பணிகள் முழுமையடையும் முன்பாக நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதி விவசாயிகள், தங்கள் குடும்பத்தினருடன் பாலகிருஷ்ணாபுரம் முதன்மைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இந்தப் பகுதியில் சுமாா் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால், இந்தப் பகுதியில் அறுவடையாகும் நெல் பயிா்களை வாடிப்பட்டிக்கு கொண்டு சென்று விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், சரக்குப் போக்குவரத்து செலவு கூடுதலாகும். எனவே, பாலகிருஷ்ணாபுரம் நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இந்தப் போராட்டம் காரணமாக, பாலகிருஷ்ணாபுரம் முதன்மைச் சாலை வழியேயான போக்குவரத்துத் தடைபட்டது. பிறகு, காவல் துறையினா், நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மீண்டும் அங்கு நெல் கொள்முதல் நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக அலுவலா்கள் உறுதியளித்தன் பேரில் விவசாயிகள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

மதுரை அரசு மருத்துவமனையில் தீ

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 24 மண... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் 26 கிலோ கஞ்சா கடத்தியது தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு முதலாவது நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

சிலம்பப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான ஓபன் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கா்நாடக மாநிலம், பெங்களூரு அத்திபேல்லியில் உள்ள என்.எம்.ஆா். கன்வென்சனல் அரங்கில் கடந்த சில வாரங்களு... மேலும் பார்க்க

அரிட்டாபட்டியில் கனிமச் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சா் பி.மூா்த்தி உறுதி

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி உறுதிபடத் தெரிவித்தாா். மேலூா் வட்டத்தில் அமைந்... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில், சிங்கப்பூா் தமிழ் மாணவா்களுக்கான சிறப்பு தமிழ்க்கூடல் கருத்தரங்கம் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்க இ... மேலும் பார்க்க

குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த செம்மினிப்பட்டியில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செம்மினிபட்டி ஊராட... மேலும் பார்க்க