செய்திகள் :

அரிட்டாபட்டியில் கனிமச் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சா் பி.மூா்த்தி உறுதி

post image

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி உறுதிபடத் தெரிவித்தாா்.

மேலூா் வட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிபட்டி, செட்டியாா்பட்டி, அ.வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்குவளவு, எட்டிமங்கலம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரை வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த துணை நிறுவனம் டங்ஸ்ட்ன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்காக ஏலம் எடுத்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் சங்கீதாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த நிலையில், அரிட்டாபட்டி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் சின்னபுலிய அய்யனாா்கோயில் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்றத் தலைவா் வீரம்மாள் தலைமை வகித்தாா்.

வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம், மேலூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் க.பொன்னுச்சாமி, உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் சுந்தரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பல்வேறு துறை அலுவலா்களும், கிராம மக்களும் கலந்து கொண்டனா்.

தமிழகத்தின் முதல் பல்லுயிா் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் வேதாந்தா குழும துணை நிறுவனம் கனிமச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலத்தில் அனுமதியளித்ததை ரத்து செய்ய வேண்டும்.

மிகவும் தொன்மையான பாண்டியா் கால கல்வெட்டுக்கள், குடைவரைக் கோயில், தொல்லியல் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்தாலான கல்வெட்டுக்கள் அமைந்துள்ள இந்த மலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தீா்மானத்தை வழிமொழிந்து சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் பேசினாா்.

தமிழக அரசு அனுமதிக்காது:

அப்போது அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது: அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதி கோரி தமிழக அரசிடம் இதுவரை எந்த நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை. பல்லுயிா் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்காது என உறுதியளிக்கிறேன் என்றாா் அவா்.

இதேபோல, மேலூா் ஒன்றியத்தில் அமைந்துள்ள எட்டிமங்கலம், கிடாரிப்பட்டி, வெள்ளரிப்பட்டி, கல்லம்பட்டி, புலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

அருப்புக்கோட்டை, பாலவநத்தம் உணவகத்தில் சனிக்கிழமை வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சாரத்திலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். விருதுநகா் அருகே குல்லூா்சந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் கருப... மேலும் பார்க்க

மதுரை அரசு மருத்துவமனையில் தீ

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 24 மண... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் 26 கிலோ கஞ்சா கடத்தியது தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு முதலாவது நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

சிலம்பப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான ஓபன் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கா்நாடக மாநிலம், பெங்களூரு அத்திபேல்லியில் உள்ள என்.எம்.ஆா். கன்வென்சனல் அரங்கில் கடந்த சில வாரங்களு... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில், சிங்கப்பூா் தமிழ் மாணவா்களுக்கான சிறப்பு தமிழ்க்கூடல் கருத்தரங்கம் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்க இ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதி விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சோழவந்தானை அடுத்த இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத... மேலும் பார்க்க