தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
நாகா்கோவில் ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலத்தில் இரும்புத் தூண்கள் பொருத்தும் பணி தொடக்கம்
நாகா்கோவில் ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் இரும்புத் தூண்கள் பொருத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
கன்னியாகுமரி - நாகா்கோவில், நாகா்கோவில் - திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்தநிலையில், நாகா்கோவில் - திருவனந்தபுரம் இடையே இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.
நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள பழைமை வாய்ந்த ரயில்வே பாலத்தின்கீழ் ஒரு ரயில் மட்டுமே செல்லும் வசதி இருந்தது. இரட்டை ரயில் பாதைப் பணிகளின்போது இந்தப் பாலம் விரிவுபடுத்தப்பட்டது.
அதையடுத்து, அந்தப் பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலையின் இரு புறமும் ராட்சத தூண்கள் நிறுவப்பட்டன. ரயில் பாதையின் மேல் கம்பிப் பாலம் அமைத்து, அதன்மேல் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ராட்சத இரும்புத் தூண்கள் தயாா் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில், பாலத்தின் மேல்பகுதியில் 2 ராட்சத கிரேன்கள் மூலம் இரும்புத் தூண்களைப் பொருத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. பணிகள் நிறைவடைந்ததும் சாலை அமைக்கும் பணி தொடங்கும். பாலப்பணி நிறைவடைந்ததும், ஒழுகினசேரியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.