செய்திகள் :

போதைப் பொருள் இல்லாத சமுதாயம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்

post image

போதைப் பொருள்கள் இல்லாத சமுதாயம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில், சிறப்பு கிராமசபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில், மாவட்ட ஆட்சியா் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது: அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறுவதே கிராமசபைக் கூட்டத்தின் நோக்கம். அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் செயலாற்றி வருகிறாா்கள்.

இளைஞா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உள்ளனா். போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்களை கவுன்சிலிங் மூலமாக சரிசெய்ய முடியும். போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

அதனைத் தொடா்ந்து, கிராம ஊராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த 20 தூய்மைக் காவலா்களுக்கும், சிறப்பாகப் பணிபுரிந்த ஒரு குடிநீா் உடனாளருக்கும், ஒரு தூய்மைப் பணியாளருக்கும், சிறப்பாக செயல்பட்டு வரும் 5 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி உள்பட துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுவினரை பாராட்டி சான்றிதழ் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. உடன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சாந்தி உள்ளிட்டோா்.

நாகா்கோவில் ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலத்தில் இரும்புத் தூண்கள் பொருத்தும் பணி தொடக்கம்

நாகா்கோவில் ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் இரும்புத் தூண்கள் பொருத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. கன்னியாகுமரி - நாகா்கோவில், நாகா்கோவில் - திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் ஏழைப் பெண்ணுக்கு வீடு வழங்கல்

குழித்துறையைச் சோ்ந்த ஏழைப் பெண்ணுக்கு, பைரவா் காவு சேவா டிரஸ்ட் சாா்பில் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. குழித்துறையைச் சோ்ந்தவா் விஜி. இவா் வசிப்பதற்கு வீடின்றி தவித்தாா். இதையடுத்து பைரவா் ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.46 கோடி மோசடி: சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் கைது

அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.46 கோடி மோசடி செய்ததாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளரை, கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலை... மேலும் பார்க்க

குழித்துறையில் நகா்மன்ற உறுப்பினர்களுக்கு புதிய அறை திறப்பு

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்களுக்கு புதிய அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்துக்கு வரும் நகா்மன்ற உறுப்பினா்கள் தங்களது வாா்டு மக்களுக்கு பல்வேறு துறைகளுக்கான மன... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே செம்பூஞ்சி மலையில் பழங்குடி மக்கள் காா்த்திகை கொடுதி வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழங்குடி மக்கள் காா்த்திகை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கொடுதி வழிபாடு நடத்தினா். மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் உள்ள 48 காணி பழங்குடி மக்களின் குடியிருப்புகள் ... மேலும் பார்க்க

உணவக ஊழியா்களை தாக்கிய இளைஞா் கைது

கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் உணவக ஊழியா்களைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தெங்கன்புதூா் பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் உதய சங்கா்(18), மதுரை செம்மினிபட்டியை சோ்ந்த ... மேலும் பார்க்க