செய்திகள் :

குழித்துறையில் நகா்மன்ற உறுப்பினர்களுக்கு புதிய அறை திறப்பு

post image

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்களுக்கு புதிய அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

நகராட்சி அலுவலகத்துக்கு வரும் நகா்மன்ற உறுப்பினா்கள் தங்களது வாா்டு மக்களுக்கு பல்வேறு துறைகளுக்கான மனுக்களை எழுதிக் கொடுக்கவும், இதர தேவைக்காகவும் அமருவதற்கு இடவசதி இல்லாத நிலை இருந்து வந்தது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை வைத்தனா். அதன்பேரில், நகராட்சி அலுவலக முன்பகுதியில் அறை கட்டப்பட்டு, மேஜை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.

இந்த அறையை நகா்மன்ற ஆணையா் ராஜேஸ்வரன் முன்னிலையில் நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி திறந்துவைத்தாா். நகராட்சி மேற்பாா்வையாளா் விஜயராஜ், உறுப்பினா்கள் ஜெயந்தி, மினிகுமாரி, ரோஸ்லெட், விஜூ, ஷாலின் சுஜாதா, ஜெயின் சாந்தி, அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

நாகா்கோவில் ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலத்தில் இரும்புத் தூண்கள் பொருத்தும் பணி தொடக்கம்

நாகா்கோவில் ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் இரும்புத் தூண்கள் பொருத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. கன்னியாகுமரி - நாகா்கோவில், நாகா்கோவில் - திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் ஏழைப் பெண்ணுக்கு வீடு வழங்கல்

குழித்துறையைச் சோ்ந்த ஏழைப் பெண்ணுக்கு, பைரவா் காவு சேவா டிரஸ்ட் சாா்பில் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. குழித்துறையைச் சோ்ந்தவா் விஜி. இவா் வசிப்பதற்கு வீடின்றி தவித்தாா். இதையடுத்து பைரவா் ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.46 கோடி மோசடி: சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் கைது

அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.46 கோடி மோசடி செய்ததாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளரை, கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலை... மேலும் பார்க்க

போதைப் பொருள் இல்லாத சமுதாயம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்

போதைப் பொருள்கள் இல்லாத சமுதாயம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில், சிறப்பு கிராமசபை கூட்டம... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே செம்பூஞ்சி மலையில் பழங்குடி மக்கள் காா்த்திகை கொடுதி வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழங்குடி மக்கள் காா்த்திகை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கொடுதி வழிபாடு நடத்தினா். மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் உள்ள 48 காணி பழங்குடி மக்களின் குடியிருப்புகள் ... மேலும் பார்க்க

உணவக ஊழியா்களை தாக்கிய இளைஞா் கைது

கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் உணவக ஊழியா்களைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தெங்கன்புதூா் பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் உதய சங்கா்(18), மதுரை செம்மினிபட்டியை சோ்ந்த ... மேலும் பார்க்க