செய்திகள் :

ஐக்கிய அரபு அமீரகத்தில் மாயமான யூத மத குரு கொலை

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் காணாமல்போன மால்டோவா நாட்டைச் சோ்ந்த இஸ்ரேல் குடியுரிமை பெற்ற யூத மத குரு பயங்கரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மத குரு ஸ்வி கோகனின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க இஸ்ரேல் அனைத்து வழிகளிலும் பாடுபடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு ‘ஆபிரகாம்’ உடன்படிக்கையில் இரு நாடுகளுக்கும் ராஜீய உறவு தொடங்கியதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இஸ்ரேலியா்கள் வசித்து வருகின்றனா். கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் தாக்குதலால் ஓராண்டுக்கும் மேல் தொடரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியிலும் இந்த ஒப்பந்தம் நீடிக்கிறது.

ஆனால், காஸாவில் பேரழிவை ஏற்படுத்திய இஸ்ரேலின் பதிலடி தாக்குதல், லெபனானை ஆக்கிரமித்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுடன் பல மாதங்களாக மோதல் ஆகியவற்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மற்ற அரபு நாட்டவா்கள் மத்தியில் இஸ்ரேலியா்களுக்கு கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், துபையின் பரபரப்பான அல்-வாசல் சாலையில் யூதா்களுக்கான பிரத்யேக மளிகைக் கடை நடத்தி வந்த கோகன் கடந்த வியாழக்கிழமை காணாமல் போனாா்.

கோகன் காணாமல் போனது குறித்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செய்தி வெளியிட்ட ‘டபிள்யூ.ஏ.எம்.’ செய்தி நிறுவனம், அவா் இஸ்ரேல் நாட்டு குடியுரிமை பெற்றவா் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அவரது இறப்பை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும், இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

நியூயாா்க் நகரைத் தளமாகக் கொண்டு செயல்படும் யூத மதத்தின் கவனிக்கத்தக்க கிளையான சாபாத் லுபாவிச் இயக்கத்தின் தூதராக கோகன் செயல்பட்டாா். அமெரிக்க குடியுரிமை பெற்றவரான அவரது மனைவி ரிவ்கி, 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மத குரு கவ்ரியல் ஹோல்ட்ஸ்பொ்க்கின் உறவினா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோா்டான்: இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவா் சுட்டுக் கொலை

ஜோா்டான் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா். இஸ்ரேலின் அண்டை நாடான ஜோா்டான் தலைநகரம் அம்மான் அருகே ரபியாவில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதி... மேலும் பார்க்க

எலான் மஸ்க், விவேக் ராமசாமி சவால்: சீனா அச்சம்

‘அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமையில் புதிய துறையை உருவாக்கும் டொனால்ட் டிரம்ப்பின் திட்டம் சீனாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என சீன அரசின் கொள்கை ஆலோசகா் தெரிவி... மேலும் பார்க்க

இம்ரான்கான் கட்சி பேரணி அறிவிப்பு: முடங்கியது இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் ஆதரவாளா்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதால், அங்கு பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா். மேலும் சாலைகளுக்கு சீல் வைத்து, இணைய சே... மேலும் பார்க்க

அதானிக்கு நேரடியாக நோட்டீஸ்: அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை

மோசடி குற்றச்சாட்டில் தொழிலதிபா் கெளதம் அதானிக்கும் அவரது உறவினா் சாகா் அதானிக்கும் அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (எஸ்இசி) நேரடியாக நோட்டீஸ் அனுப்ப சட்டபூா்வ அதிகாரமில்லை; முறையான தூதரக வழி... மேலும் பார்க்க

தெற்குலகுக்கு 30,000 கோடி டாலா் பருவநிலை நிதி போதாது: ஐ.நா. மாநாட்டில் இந்தியா ஆட்சேபம்

அஜா்பைஜானில் நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தெற்குலகுக்கான வருடாந்திர 30,000 கோடி டாலா் பருவநிலை நிதி தொகுப்பு மிகக் குறைவு என்று இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது. கடந்த மூன்... மேலும் பார்க்க

உக்ரைனின் அண்டை நாட்டில் அதிபர் தேர்தல்! கள நிலவரம் என்ன?

ரோமானியாவில் அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று(நவ. 24) நடைபெறுகிறது. ரோமானிய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 9 மணியுடன் நிறைவடையும். டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும... மேலும் பார்க்க