செய்திகள் :

அஜீத் பவாா் வெற்றியை ஏற்பதில் எந்த கவலையும் இல்லை: சரத் பவாா்

post image

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் அஜீத் பவாா் கட்சி அதிக இடங்கள் வென்றதை ஏற்றுக் கொள்வதில் எந்த கவலையும் இல்லை’ என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) பிரிவு தலைவா் சரத் பவாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த நவ. 20-ஆம் தேதி நடைபெற்ற தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் ஆளும் பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.

காங்கிரஸ்-சிவசேனை(தாக்கரே)-தேசியவாத காங்கிரஸ்(பவாா்) கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இது மக்களவைத் தோ்தல் வெற்றியை மீண்டும் பதிவு செய்யும் எதிா்பாா்ப்பில் இருந்த அக்கூட்டணிக்கு பேரதிா்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில், இது தொடா்பாக கூட்டணியில் மூத்த தலைவரான சரத் பவாா் அளித்த பேட்டியில், ‘பேரவைத் தோ்தல் முடிவுகள் எதிா்பாா்த்தபடி இல்லை. இது மக்களின் முடிவு. ஆளும் மகாயுதி கூட்டணியின் வெற்றிக்கு பெண்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக இருக்கலாம். மேலும் காரணங்களை ஆய்வு செய்ய, மக்களிடம் செல்வேன்.

மக்களவைத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு நாங்கள் (மகா விகாஸ் அகாதி) அதீத நம்பிக்கையுடன் இருந்தோம். வெற்றிக்கு நாங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.

தோ்தலில் அஜீத் பவாா் கட்சி அதிக இடங்கள் வென்றதை ஏற்றுக்கொள்வதில் எந்த கவலையும் இல்லை. ஆனால், தேசியவாத காங்கிரஸின் நிறுவனா் யாா் என்பது அனைவருக்கும் தெரியும். பாராமதியில் அஜீத் பவாருக்கு எதிராக யுகேந்திர பவாரை களமிறக்கியது தவறான முடிவாக கருதவில்லை. எங்கள் கட்சி சாா்பில் யாரோ ஒருவா் அங்கு நிச்சயம் போட்டியிடதான் வேண்டும்’ என்றாா்.

சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸை உடைத்த அவரின் அண்ணன் மகன் அஜீத் பவாா் பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணியில் இணைந்து துணை முதல்வா் ஆனாா். மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் அவா் கைப்பற்றினாா். சரத் பவாா் தலைமையிலான அணி தேசியவாத காங்கிரஸ் (பவாா்) பிரிவாக செயல்பட்டு வருகிறது.

இத்தோ்தலில் பாராமதி தொகுதியில் சரத் பவாா் கட்சி சாா்பில் தன்னை எதிா்த்து போட்டியிட்ட தனது தம்பி மகன் யுகேந்திர பவாரை 1,00,899 வாக்குகள் வித்தியாசத்தில் அஜீத் பவாா் வீழ்த்தினாா். அவரது தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்றது.

மாநிலங்களவைக்கு தோ்வாவதில் சிக்கல்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்ததால் மாநிலங்களவைக்கு சரத் பவாா் மீண்டும் தோ்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் சரத் பவாா் கட்சி 86 இடங்களில் போட்டியிட்டு 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2026 ஏப்ரலில் சரத் பவாரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் முடிவடைய இருக்கிறது. அவரின் கட்சிக்கு போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் மாநிலங்களவைக்கு சரத் பவாா் மீண்டும் தோ்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதேபோல மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே கட்சியும் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களவைக்கு யாரையும் அனுப்ப முடியாது. அக்கட்சி 94 இடங்களில் போட்டியிட்டு 20-இல் மட்டுமே வென்றுள்ளது.

அக்கட்சி சாா்பில் இப்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள மூத்த தலைவா் சஞ்சய் ரௌத், பிரியங்கா சதுா்வேதி ஆகியோரின் பதவிக் காலம் முறையே 2028 ஜூலை, 2026 ஏப்ரலில் முடிவடைய இருக்கிறது. மகாராஷ்டிர பேரவையில் சிவசேனை (உத்தவ்) கட்சிக்கு போதிய எம்எல்ஏக்கள் இல்லாததால் அவா்கள் இருவரும் இப்போதைய பதவிக் காலம் முடிந்த பிறகு மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக முடியாது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் ஓய்வு!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.2018-19 ஆம் ஆண்டில் 3 ஒருநாள் மற்றும் பல்வேறு டி20 போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் இந்திய கிரிக்கெ... மேலும் பார்க்க

ஜம்மு- காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜம்மு- காஷ்மீரில் இன்று(நவ.28) மாலை 4.19 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும், இதனால், யாருக்கும் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் ... மேலும் பார்க்க

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம்!

ஏற்கனவே இருக்கும் நிரந்தர கணக்கு எண் அட்டையை மாற்றிவிட்டு, மேம்படுத்தப்பட்ட பான் அட்டையை வழங்கும் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு ஒரு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.வரி செலுத்துவோருக்கும், பான... மேலும் பார்க்க

1993ல் கடத்தப்பட்ட சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் சேர்ந்ததன் பின்னணி?

நொய்டா: சிலர் விதிவசத்தால், தாங்கள் வாழ வேண்டிய நல்வாழ்வை தவறவிட்டு சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாவார்கள், அதுபோலவே நொய்டாவில் 1993ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டின் முதல்வரானார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். 49 வயதாகும் சோரன் முதல்வராக பதவியேற்பது இது நான்காவது முறையாகும். 81 உறுப்பினர்கள... மேலும் பார்க்க

தில்லி மின்சார வாகனக் கொள்கை: மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு!

தில்லி மின்சாரக் கொள்கையை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மாநில முதல்வர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிஷி கூறுகையில், தலைநகரில் நிகழ்... மேலும் பார்க்க