செய்திகள் :

நடிகை கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும்: நீதிபதி மனைவி முன்வைக்கும் காரணம் என்ன?

post image

நடிகை கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும் என சென்ன உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் மனைவி காமாட்சி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடர்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடா்பாக அவா் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருநகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

இதனிடையே, நடிகை கஸ்தூரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருந்த நிலையில், அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் ஞாயிற்றுகிழமை காலை சென்னை அழைத்து வந்தது. பின்னர் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணையை முடித்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும் என சென்ன உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் மனைவியும் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்‌ஷம் அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவருமான காமாட்சி சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க |தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த உத்தரவு!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வேண்டுகோளில், அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக எழுந்த புகாரின் பேரில் அவதூறு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக ஒரு கோரிக்கை. நடிகை கஸ்துரி குறித்த வழக்கு தொடர்பாக நான் கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது. அதேசமயம் அவருக்கு ஆட்டிஸம் பாதித்த ஒரு மகன் இருப்பதாகவும், அவர் தனி ஒருவராக அந்த மகனை போராடி வளர்த்து வருகிறார் என்பதை அறிந்துள்ளேன். இந்த பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால்.

நானும் கஸ்தூரியை போன்று ஒரு சிறப்பு அம்மாதான். எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் உள்ளார். இதன் அடிப்படையில் எனக்கும் என்னைப் போன்ற ஏனைய அம்மாக்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கத் தோன்றுகிறது.

கஸ்தூரி ஜாமீன் விவகாரத்தில் நீதிமன்றங்கள் அவரது குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

ஒரு மாற்றுத் திறனாளியின் தாயாக கஸ்தூரிக்கு என் உடன் நிற்றலை தார்மீக கடமை என நினைத்தே இதனை நான் பதிவிடுகிறேன் என அவர் கூறியுள்ளார்.

டி20 தரவரிசை: முதலிடத்தில் ஹார்திக் பாண்டியா! 3-வது இடத்தில் திலக் வர்மா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 4 போட்டி... மேலும் பார்க்க

கயல் தொடரில் பிகில் பட நடிகர்!

கயல் தொடரில் பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் விஷ்வா நடிக்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில வாரங்கள... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரங்களை தொடங்குங்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இன்றுமுதல் தேர்தல் பிரசாரங்களை தொடங்குங்கள், துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரசாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொண்டர்கள் அனைவரும் தொடங்க வேண்டும் என திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தி... மேலும் பார்க்க

டிசம்பர் 2 ஆவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்..?

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் 2 ஆவது வாரத்தில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நிதிநிலை மானியக் கோரிக்கைகளுக்காக ஜூன் 20 முதல் 29 ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி பலி

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தார் . தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் தங்க ராஜா (55). விவசாய கூலித் தொழிலாளியா... மேலும் பார்க்க

காலிறுதியில் தோல்வி: கண்ணீருடன் விடைபெற்றார் ரஃபேல் நடால்!

டேவிஸ் கோப்பை காலிறுதிச் சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், டென்னிஸில் இருந்து தோல்வியுடன் விடைபெற்றார்.22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் ... மேலும் பார்க்க