ரூ. 2.2 லட்சம் கோடி பங்குகளை இழந்த அதானி குழுமம்!
அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் ரூ. 2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அதானி குழுமம் இழந்துள்ளது.
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் அதானி குழுமங்களின் பங்குகள் 20 சதவிகிதம் வரை வீழ்ச்சியை கண்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க : அதானிக்கு பிடிவாரண்ட்! அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்தது!
அதானி குழும பங்குகள்
அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் 20.86 சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் 17.01 சதவிகிதமும் சரிவைக் கண்டுள்ளது.
அதானி பவர் - 11.03%, அதானி எனர்ஜி சொல்யூஷன் - 19.12%,
அதானி கிரீன் எனர்ஜி - 17.38%, அதானி டோட்டல் கேஸ் - 12.71%, அதானி வில்மார் - 9.35%, ஏசிசி லிமிடெட் - 8.88%, அம்புஜா சிமெண்ட்ஸ் - 10.49%, என்டிடிவி - 8.39% சங்கி இண்டஸ்ட்ரீஸ் - 7.30% சரிவைக் கண்டுள்ளது.
அதானி குழுமங்கள் வியாழக்கிழமை காலை இழந்த மொத்த பங்குகளின் மதிப்பு ரூ. 2.2 லட்சம் கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.