'கொதித்த வானதி... காட்டமான ஹெச்.ராஜா..!' - பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என...
Adani: 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகளே!' - அதானி குழுமத்தின் அறிக்கை கூறுவதென்ன?!
'இது அடிப்படையற்ற குற்றசாட்டு' என்று அதானி மீதான அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டிற்கு அதானி நிறுவனம் பதிலளித்துள்ளது.
அதானி நிறுவனம் தனது அறிக்கையில், "அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற கமிஷன், அதானி குழுமத்தின் இயக்குநர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது அடிப்படையில்லாதது ஆகும். அந்தக் குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம்.
அமெரிக்க நீதித்துறை தங்களது குற்றச்சாட்டில் கூறியுள்ளதுபடி, இவை வெறும் குற்றச்சாட்டே மற்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகள்தான்.
இந்தக் குற்றம் சம்பந்தமாக அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.
அதானி குழுமம் சட்ட திட்டங்கள், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை முழுவதுமாக கடைபிடிக்கும் நிறுவனம் ஆகும். நாங்கள் எங்கள் பங்குதாரர்கள், ஊழியர்களுக்கு நாங்கள் சட்டத்தை முழுவதும் பின்பற்றும் நிறுவனம் என்பதை உறுதியளிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்கா, 'சோலார் ஒப்பந்தத்தில் ஊழல்' என்று புகார் எழுப்பியது. இதனால், இன்று அதானி குழுமத்தின் பங்கு பெரிதும் சரிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது அதானி குழுமத்தில் இருந்து இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.